1828. | அண்ணல், அன்ன சொல் கேட்டனன்; அன்றியும், உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்; கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன், எண்ணுகின்றனன், என் செயற்பாற்று?’ எனா, |
அண்ணல் - இராமன்; அன்ன சொல் கேட்டனன் - அவள் சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன் மேலும்; உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில் தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்- உடன்படாதவனாய்; ‘என்செயற்பாற்று’ எனா - செய்தற்குத்தகுதியானது யாது என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான். ‘அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக் கைவிட உடன்படாது’ என்றும்பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும் ஒன்றாக இருப்பது உணர்ந்து சிந்திப்பான் ஆயினன்இராமன். 223 |