நகர மக்கள் இராமனைத் தொடர்தல்  

1836.ஆரும் பின்னர் அமுது அவலித்திலர்;
சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;
‘வீரன்முன் வனம் மேவிதும் யாம்’ எனா,
போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார்.

     ஆரும் - எவரும்;  பின்னர் - பிறகு;  அழுது  அவலித்திலர் -
அழுது துன்பம் உறவில்லை; சோரும் சிந்தையர் - தளர்ந்த மனத்தோடு;

யாவரும்  சூழ்ந்தனர் - அனைவரும் ஆலோசித்து;  ‘வீரன்முன் -
இராமனுக்கு முன்னே;  யாம் வனம் மேவுதும்’ - நாம் காட்டிற்குச்
செல்வோம்;  எனா -என்று;  போர் என்று ஒல்லொலி கைம்மிக -
‘போர்’ என்று ஒல்லென்ற ஒலி அளவு கடக்க;போயினார் - புறப்பட்டுச்
சென்றார்கள்.

     ‘போர்’ என்பது ஒலிக்குறிப்பு. ’போர்’ போல ஒலி மிகுதியாக எனலும்
ஆம். இராமனுக்குமுன்பே காடு செல்வதென முடிவு செய்தமையால்
அழுதலும் அவலித்தலும் இல்லை.                                231