தாய்மார் ஆசிகூறல் 1838. | ஏத்தினார், தம் மகனை, மருகியை; வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார், ‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்- நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். |
நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது; நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை, மருகியை - தம் மகனாகிய இராமனையும் மருகியாகியசீதையையும் ; இளையோனை - இலக்குவனை; வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் - புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்; ‘காத்து நல்குமின் தெய்வதங்காள்!’ - காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’ என்றார்-. மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார் என இயைக்க. தானாக முன்வந்து வனம் செல்லும் இளையோனை வழுத்தினர் அல்லது ஏத்தினர் எனல் சிறப்பு. 233 |