சூரியன் மறைதல்  

1842.மீன் பொலிதர, வெயில் ஒதுங்க, மேதியோடு
ஆன் புக, கதிரவன் அத்தம் புக்கனன் -
‘கான் புகக் காண்கிலேன்’ என்று, கலலதர்
தான் புக முடுகினன் என்னும் தன்மையான்,

     கதிரவன் - சூரியன்; ‘கான்புகக காண்கிலேன்’ என்று - (இராமன்)
காடுசெல்வதைக் காணச் சகியேன் என்கின்ற காரணத்தால்;  கல்லதர் -
கல்பொருந்தியகாட்டு வழியில்; தான்புக முடுகினன் - தானும் செல்லுதற்கு
விரைந்தான்; என்னும்தன்மையான் - என்று சொலல்லும்படியானவனாக;
மீன் பொலிதர - நட்சத்திரங்கள்விளங்க;  வெயில் ஒதுங்க - வெயில்
ஒளி விலக; மேதியோடு ஆன்புக - மேயச்சென்ற எருமையோடு பசுக்கள்
இல்லம் சேர; அத்தம் புக்கனன் - மாலை மறை  மலையைச்(அத்தமன
கிரி) சேர்ந்தான்.

     சூரியன் மறைதலை இராமன் கான்புகச் சகியாமல் தானும் கல்லதர்
புகவிரைந்தான் என்றதுதற்குறிப்பேற்ற அணி, மாலைக் காலத்தே
விண்மீன்கள் தோன்றல்; வெயில் மறைதல்;மந்தையிலிருந்து  ஆவினங்கள்
வீடு புகுதல் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் கவிஞர் தாம் ஒரு
குறிப்பேற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்றமாகிறது.                      3