முனிவர்களோடு இராமன் தங்கல் 1846. | திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று, ஒரு விரை செறி சோலையை விரைவின் எய்தினான்; இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும் உரை செறி முனிவரோடு உறையும் காலையே. |
இராமன் -; திருநகர்க்கு - அயோத்திக்கு; ஓசனை இரண்டு விரைவின் சென்று -இரண்டு யோசனை தூரம் வேகமாகச் சென்று; ஒரு விரைசெறி சோலையை - மணம்பொருந்திய ஒரு சோலையை; எய்தினான் - அடைந்து; இரதன் நின்று இழிந்து -தேரிலிருந்து இறங்கி; பின் - பிறகு; இன்புறும் - தன் வரவால் மகிழ்ச்சிஅடைகின்ற; உரை செறி முனிவரோடு - மந்திரவுரையால் நிறைந்த முனிவர்களோடு; உறையும் காலை - தங்கியிருக்கும் நேரத்தில். உரை செறி-புகழ் மிகுந்த என்றும் ஆம். அடுத்த பாட்டில்முடியும். 7 |