சுமந்திரன் வருந்தல்  

1858.செவ்விய குரிசில் கூற,
     தேல் வலான் செப்புவான், ‘அவ்
வெவ்விய தாயின், தீய
     விதியினின் மேலன் போலாம்;
இவ் வயின் நின்னை நீக்கி,
     இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி,
அவ் வயின் அனைய காண்டற்கு
     அமைதலால் அளியன்’ என்றான்.

     செவ்விய குரிசில் கூற - செம்மை வாய்ந்த இராமன் இவ்வாறு
சொல்ல; தேர்வலான் - தேர் செலுத்துதலில் வல்லவனாகிய சுமந்திரன்;
செப்புவான் -சொல்வான்; ‘இவ்வயின் நின்னை நீக்கி - இந்த இடத்தில்
உன்னைக் கைவிட்டு; இன் உயிர் தீர்ந்து இன்று - இனிய உயிர் நீங்க
இன்றைக்கே; ஏகி - புறப்பட்டுச்சென்று; அவ்வயின் - அந்த
அயேத்தியிலும்; அனைய - அதுபோலவே உள்ளகாட்சிகளை (உயிற்ற
உடல்களை); காண்டற்கு - பார்ப்பதற்கு; அமைதலால் -மனம் பொருந்திச்
சேறலால்; அளியன் - இரங்கத் தக்கவனாகிய யான்; அவ்வெவ்விய
தாயின் -
அந்தக் கொடிய தாயாகிய கைகேயியைக் காட்டிலும்; தீய
விதியினின்-
கொடிய விதியைக் காட்டிலும்; மேலன் போல் ஆம் -
மேம்பட்டவன்ஆவேன்போலும்;’ என்றான் -,

     ‘இன் உயிர் தீர்ந்து’ உயிர் போகப் பெற்று வெற்றுடலோடு
அயோத்திக்கு இன்றே சென்று,இதுபோலவே வெற்றுடலோடு அயோத்திக்கு
இன்றே சென்று, இதுபோலவே வெற்றுடல் காட்சிகளையேஅங்கும் காண
என்று பொருள் செய்தலே பொருந்தும். இனி,  ழுதீர்ந்தின்று’ என்பதை
ஒன்றாக்கி, உயிர் நீங்கப்பெறாமல் எனப் பொருள் கூறின்,  ‘அனைய’
என்கின்ற உவமை மாட்டேறு அதே போன்ற‘உயிரோடு உள்ளவர்களை’
எனவே பொருள்பட்டுச் சிறப்பின்றாகும்  என்க.                      19