1862. | ‘ “நால் திசை மாந்தரும், நகர மாக்களும், தேற்றினர் கொணர்வர் என் சிறுவன் தன்னை” என்று ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என் கூற்று உறழ் சொல்லினால், கொலை செய்வேன்கொலோ? |
‘ஐய! - இராமனே; ‘நால்திசை மாந்தரும் - நான்கு திசைகளிலும் உள்ளமனிதர்களும்; நகர மாக்களும் - நகர மக்களும்; ‘உன் சிறுவன் தன்னை -(தசரதனே!) உன் மகனை; தேற்றினர் கொணர்வர்’- அழைத்து வருவர்’ என்று -; ஆற்றின அரசனை - (உயிர் நீங்காதபடி) ஆறுதல் கூறிக் காத்த அரசனை; என் -என்னுடைய; கூற்று உறழ் சொல்லினால்- இயமனை ஒத்த கொடிய வார்த்தையால்; கொலை செய்வேன்கொலோ?! - உயிர் நீங்குமாறு செய்து விடுவேனோ.’ அனைவரும் அரசனைத் தேற்றியிருப்ப நான் நீ காடு சென்ற செய்தி கூறி அவனுயிரைஅழிக்கின்றவ னாய்விடுவேனோ என அஞ்சுகிறான். 23 |