1866. | ‘பிறத்தல் ஒன்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்! புறத்துறு பெறும் பழி பொது இன்று எய்தலும், அறத்தினை மறத்தியோ, அவலம் உண்டு எனா? |
‘பிறத்தல்என்று உற்ற பின் - இவ்வுலகில் பிறந்தாயிற்று என்ற பிறகு; பெறுவ யாவையும்- நேரக்கடவ இன்பதுன்பங்கள் எல்லாவற்றையும்; திறத்துளி - அவ்வவற்றின் கூறுபாட்டோடே;உணர்வது ஓர் - அறிகின்றதாகிய ஒப்பற்ற; செம்மைஉள்ளத்தாய்!- நேர்மையான மனம் உடைய சுமந்திரனே; அவலம் உண்டெனா -துன்பம்உண்டாகின்றதே என்று கருதி; புறத்து உறு பெரும்பழி - உலகரால்சொல்லப்படும் பெரியபழியை; பொது இன்று எய்தலும் -சிறப்பாக அடைதலையும் (உணராது); அறத்தினைமறத்தியோ?’ - தருமத்தினைமறந்தாயோ?’ துன்பத்திற்குப் பயந்து தருமத்தை மறக்கலாமோ? தருமத்தை மறந்தால் பழி வந்து சேரும் அல்லவா? உலகத்தில் பிறந்த பிறகு இன்ப துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற வேண்டுமே அன்றித் துன்பத்திற்குப் பயந்து அறத்தை மறத்தல் கூடாது என்றான். உள்ளி - உளி - தொகுத்தல் விகாரம். 27 |