1869.‘கான்புறம் சேறலில்
     அருமை காண்டலால்,
வான் பிறங்கிய புகழ்
     மன்னர் தொல் குலம்,
யான் பிறந்து, அறத்தினின்று
     இழுக்கிற்று என்னவோ?-
ஊன் திறந்து உயிர் குடித்து
     உழலும் வேலினாய்!

     ‘ஊன்திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது)
உடலைத் திறந்துஉயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே!; கான்
புறம் சேறலில் அருமை காண்டலால் -
காட்டின் புறத்தே செல்லுதலால்
உண்டாகும்  அருமையை (துன்பத்தை)  நினைத்து  (நான்)திரும்புதலால்;
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் -
வானளாவிய புகழ் பெற்ற
மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்;  யான் பிறந்து
அறத்தினின்று  இழக்கிற்று -
யான் பிறந்த படியால் அறத்திலிருந்து
தவறியது;  என்னவோ?’ -
என்றுஎல்லாராலும்சொல்லப்படவோ.’

      வனவாசத்தின்அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ்
கெடும் என்றானாம்.                                             30