1875. | ‘ “ஏழ் - இரண்டு ஆண்டும் நீத்து, ஈண்ட வந்து உனைத் தாழ்குவென் திருவடி; தப்பிலேன்” எனச் சூழி வெங் களிற்று இறை தனக்குச் சோர்வு இலா வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய். |
‘ஏழ் இரண்டு ஆண்டும் நீத்து - பதினான்னு ஆண்டுகளும் கழித்து; ஈண்ட வந்து -விரைவாக வந்து; உனைத் திருவடி தாழ்குவென் - உனது திருவடிகளை வணங்குவேன்; தப்பிலேன் - தவற மாட்டேன்’; என - என்று; சூழி - முகபடாம் அணிந்த; வெங்களிற்று இறை தனக்குக் - கொடிய யானையை உடைய தயரத மன்னனுக்குச் சொல்லி; சோர்வு இலா - தளர்ச்சி இல்லாத; மாதவன் சொலால் - வசிட்ட முனிவன்சொல்லால்; மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தெளிவிப்பாய்.’ ‘வாழி’ அசை. 36 |