தயரதன் வினாதல் 1896. | ‘இரதம் வந்து உற்றது’ என்று, ஆங்க யாவரும் இயம்பலோடும், வரதன் வந்துற்றான் என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான் புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி, விரம மா தவனைக் கண்டான். ‘வீரன் வந்தனனோ? என்றான். |
‘இரதம் வந்து உற்றது’ என்று- (காடு சென்ற) தேர் வந்து சேர்ந்தது என்று; ஆங்கு யாவரும் இயம்பலோடும் - அங்குள்ள அனைவரும் சொல்லியவுடன்; மன்னனும் -தசரதனும்; ‘வரதன் வந்துற்றான்’ என்ன - இராமன் வந்து சேர்ந்தான் என்று கருதி; மயக்கம் தீர்ந்தான் - மன மயக்கம் நீங்கினவனாய்; புரைதபு கமல நாட்டம் -குற்றம் அற்ற தாமரை மலர்போலும் கண்கள்; ‘பொருக்’ என - சடக்கென; விழித்துநோக்கி - திறந்து பார்த்து; விரத மாதவனைக் கண்டான் - நோன்பு மேற்கொண்ட சிறந்த வசிட்ட முனிவனைக் கண்டு; ‘வீரன் வந்தனனோ’? - இராமன் திரும்பி வந்தானோ; என்றான் - ‘பொருக்’ விரைவுக் குறிப்பு மொழி. வரதன் - இராமன்; வேண்டுவார் வேண்டுவன தருபவன்என்னும் பொருளது. 57 |