(இந்த இரண்டு செய்யுட்களும், ‘மண்ணுறு முரசு
இனம்’ எனத் தொடங்கும் முதற் பாடலின்முன்,
படலத்தின் தொடக்கத்தில் உள்ளன.)

190.எய்திய முனிவரன்
     இணைகொள் தாமரை
செய்ய பூங் கழலவன்
     சென்னி சேர்த்த பின்,
‘வையகத்து அரசரும்
     மதி வல்லாளரும்
வெய்தினில் வருக’ என
     மேயினான் அரோ.

     முனிவரன் - வசிட்டன்; செய்ய பூங்கழலவன் - தயரதன்;
மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர்,  இங்கே அமைச்சர்;
வெய்து - விரைவாக;  அரோ- அசை.                          4-1