191.ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
     அமைவினன் ஆகி,
நாளும் நல் தவம் புரிந்து,
     நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத்
     தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு
     ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள்.

     நளிர் மதிச் சடையோன் - சிவபிரான். சிவனை வழிபட்டுக்
கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு
சேர்ப்பித்தவன்பகீரதன்.                                     66-1