தேவிமாரை அகற்றி அனுப்பி, பரதனுக்கு ஓலை அனுப்புதல் 1915. | தேவிமாரை, ‘இவற்கு உரிமை செய்யும் நாளில், செந் தீயின் ஆவி நீத்திர்’ என நீக்கி, அரிவைமார்கள் இருவரையும் தா இல் கோயில்தலை இருத்தி, ‘தண் தார்ப் பரதற் கொண்டு அணைக’ என்று ஏவினான், மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்து, அவரை, |
தேவிமாரை -அறுதிபதினாயிரம் தேவியரையும்; ‘இவற்கு உரிமை செய்யும் நாளில் - இவனுக்குஇறுதிக்கடன் செய்யும் நாளில்; செந்தீயின் ஆவி நீத்திர் - நெருப்பில் உடன்கட்டை ஏறி உயிர்விடுவீராக;’ என நீக்கி - என்று போகச்செய்து; அரிவைமார்கள்இருவரையும் - பட்டத்தரசியர் இருவரையும்; தாவில் கோயில் தலை இருத்தி -குற்றமற்ற அரண்மனையில் இருக்குமாறு செய்து; மன்னவன் ஆணை எழுதும் முடங்கல் கொடுத்து அவரை- அரசன் ஆணையை எழுதும் ஓலையைக் கொடுத்துத் தூதுவரை; ‘தண்தார்ப் பரதன் கொண்டுஅணைக’ என்று ஏவினான் - குளிர்ந்த மாலை அணிந்த பரதனை அழைத்துக்கொண்டு வருக என்றுசொல்லி அனுப்பினான். அவரை என்பது பண்டறி சுட்டு. ஓலை எடுத்துச் செல்லற்குரிய தூதுவர் என்பதுஉணரப்பட்டது. 76 |