1921.மான அரவின் வாய்த் தீய
     வளை வான் தொளை வாள் எயிற்றின்வழி
ஆன கடுவுக்கு, அரு மருந்தா
     அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து,
போன பொழுதில் புகுந்த உயிர்
     பொருந்தார் ஒத்தார் - பொரு அரிய
வேனில் மதனை மதன் அழித்தான்
     மீண்டான் என்ன ஆண்டையோர்.

     ஆண்டையோர்- அங்கேயிருந்த அந்நகரத்தவர்; பொரு அரிய
வேனில் மதனை மதன்அழித்தான் -
ஒப்பற்ற வசந்தகாலத்துகுரிய
மன்மதனை அழகால் செருக்கழித்த இராமன்; மீண்டான் என்ன-
அயோத்திக்குத் திரும்பிவிட்டான் என்று கருதி; மானஅரவின் -சீற்றம்
பொருந்திய பாம்பின்;  வாய்த் தீய வளை  வான்தொளை
வாள்
எயிற்றின்வழி ஆன கடுவுக்கு-
வாயில் உள்ள தீய வளைந்த சிறந்த
விடப்பல்லின் ஆக வரும் விடத்துக்கு;  அரு மருந்தா -அரியமருந்தாக;
அருந்தும் அமுதம் பெற்று  உய்ந்து - உண்ணக்கூடியசாவா மருந்தைப்
பெற்று  உயிர் பிழைத்து; போன பொழுதில்-வெளியே போன உடனேயே;
புகுந்த உயிர்- திரும்ப உள்ளே  வந்து  புகுந்த உயிரை;  பொருத்தார்
ஒத்தார் -
தாங்கியவர்களைப்  போன்றார்கள்.

     பாம்பினாற் கடியுண்ட  உடனே வெளியேறிய உயிர் அமுதம் பெற்று
உய்ந்து மீண்டும் உள்ளேபுகுந்தாற் போல முதல்நாள் இரவில்
சோர்ந்திருந்த நகரினர் காலையே தேரின் சுவடு கண்டுஅயோத்தி நகர்
நோக்கி மகிழ்ந்தபடி.  உள்ளது என்றார். அமுதம் - சாவாமருந்து.       82