1946. | தேவதேவன் செறி சடைக் கற்றையுள் கோசை மாலை எருக்கொடு கொன்றையின் பூவும் நாறவள்; பூங்குழல் கற்றையின் நாவி நாள்மலர் கங்கையும் நாளினாள். |
கங்கையும் - கங்கா தேவியாகிய நதியும்; தேவ தேவன் - சிவ பிரானது; செறி சடைக் கற்றையுள் - செறிந்த சடைக் கற்றைக்குள்; (நெடுநாள் இருந்ததனால் உளதான) கோவை மாலை எருக்கொடு - எருக்கம் பூமாலைச் சரத்தோடு; கொன்றையின்பூவும் - கொன்றை மலர் மணமும்; நாறலள் - இப்பொழுது வீசப் பெறாதவனாய்; பூங்குழல் கற்றையின் - (சீதையின்) அழகமைந்த கூந்தல் தொகுதியில் உள்ள; நாவி- கத்தூரிப் புனுகு எண்ணெய் மணமும்; நாள்மலர் - அன்றலர்ந்த மலர்களின் மணமும்; நாளினள் - வீசப் பெற்றாள். சிவபிரான் சடையில் நெடுநாளாக உள்ள கங்கை அங்கே உள்ள கொன்றை, எருக்கு முதலிய மலர்மணம் வீசவேண்டியிருக்க, சீதை ஆடுதலால் அது நீங்கி சீதையின் கூந்தல் நாவி, மலர் மணம்வீசப் பெற்றவளாக ஆனாள் என்பது உயர்வு நவிற்சியணி. இக் கற்பனை முன்னும் வந்தது (42). 21 |