1949. | சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று, தன் விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து, முழுகித் தோன்றுகின்றாள், முதல் பாற்கடல் - அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள். |
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று - சுழிகள் உண்டாகப் பெற்று மேல் எழும்பிஅசைகின்ற பேரொலி உடைய கங்கை ஆற்றில்; தன் விழியின்சேல் உகள் - தன்கண்களைப் போல் மீன்கள் துள்ளுகின்ற; வால் நிற வெள்ளத்து - வெண்மையான நிறமுடையநீர்ப்பெருக்கில்; முழுகித் தோன்றுகின்றாள் - முழுகி எழும்புகின்ற சீதை; முதல்- ஆதி நாள்; பாற்கடல் அழுவத்து - பாற்கடற் பெருக்கிலே; அன்று எழுவாள் - அன்று தோன்றியவளாகிய திருமகள்; எனல் ஆயினாள் - என்று சொல்லும்படிதோன்றினாள். கங்கையின் வெண்ணீர்ப் பெருக்கில் முழுகி மேல் எழும் சீதை திருப்பாற்கடல் கடைந்தபோதுஅதன் பரப்பின் மேல் எழுந்த திருமகள் போல் வாள் ஆயினள் என்க. 24 |