1950. | செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி, வையம் மா நரகத்திடை வைகுமே? |
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் - சிவந்த செந்தாமரை போலும்திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால்; வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் - உலகோரது கொடிய பாவங்களை எல்லாம் போக்கி விளங்குபவனாகிய கங்கை; (இப்போது இராமனாகிய திருமால் நீராடலால்) ஐயன் மேனி எல்லாம் அளைந்தாள் -இராமனது திருமேனி முழுதும் தீண்டப் பெற்றவளாக ஆனாள்; இனி - இனிமேல்; வையம்- கங்கையில் முழுகும் இவ் உலகம்; மா நரகத்திடை வைகுமே - கொடிய நரகத்திடத்துத் தங்கமோ (தங்காது). திருவடி பட்டது திருவிக்கிரமன் ஆனபோது. திருவடி அளவிலேயே கொடிய பாவங்களைப்போக்குபவன் இப்போது திருமேனி முழுதும் பட்டபடியால் வையத்தை நரகத்திலிருந்து நீக்குவாள்என்பது சொல்லவும் வேண்டுமோ என்றவாறாம். 25 |