இராமன் குகனை, ‘இரு’ என, அவன் தான் கொணர்ந்தகையுறைப் பொருளை அறிவித்தல் 1966. | ‘இருத்தி ஈண்டு’ என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த அருந்தியன், ‘தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருஉளம்?’ என்ன, வீரன் விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்; |
‘ஈண்டு இருத்தி’ என்னலோடும் - இங்கே அமர்வாயாக என்று இராமன் கூறியஅளவிலும்; இருந்திலன்- தன்னடக்கத்தால் இருந்தானில்லை; எல்லை நீத்தஅருத்திலன் - அளவு கடந்த அன்புடையனாய்; ‘அழுதினுக்கு அமைவதாகத் தேனும் மீனும்திருத்தினென் கொணர்ந்தேன் - தேவரீருக்கு உணவாகப் பொருந்தும்படி தேனையும், மீனையும்தூய்மை செய்து ஆராய்ந்து கொண்டு வந்துள்ளேன்; திரு உளம் என்கொல்? என்ன - தங்கள்மனக்கருத்து யாதோ?’ எனக் கூறி நிற்க; வீரன் - இராமன்; விருத்த மாதவரைநோக்கி - வயது முதிர்ந்த முனிவர்களைப் பார்த்து; முறுவலன் - இளஞ்சிரிப்புச் செய்தவனாய்; விளம்பல் உற்றான் - சொல்லத் தொடங்கினான். தவத்தோர் உண்ணத்தகாத தேனையும் மீனையும் அன்போடு குகன் கொடுக்கின்றான். அருகேமுனிவர்கள் இராமன் என்செய்வானோ என்று கருதும் அகக்குறிப்பு உடையவராக ஆயினமை கண்டு,அவர்களுக்கும் குகனது அன்பின் பெருக்கை உணர்த்துமுகத்தான் இளநகை செய்து கூறுவானாயினன்என்க. 14 |