இராமன் குகனது அன்பைப் பாராட்டுதல் 1967. | ‘அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே? பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ என்றான். |
‘அரிய - அருமையான பொருள்கள்; தாம் உவப்ப - தாம் மகிழ்ச்சியடைதற்குத் காரணமானவை; உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரச்கொணர்ந்த - மனத்துள்ளே இருக்கின்ற அன்பின் முதிர்ச்சியாகிய பக்தி அனைவர்க்கும்புவப்படுமாறு கொண்டு வரப்பட்டவை; என்றால் - என்று ஆகுமானால்; அமிழ்தினும்சீர்த்த அன்றே? - தேவர் அழுதத்தைக் காட்டிலும் சிறப்புடையவை அல்லவா; பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம் - எப்பொருளும் அன்பினால் கொண்டு வரப்பட்டவை என்றால்அவை தூய பொருள்களே; எம்மனோர்க்கும் - எம்போன்ற தவம் மேற்கொண்டவர்களுக்கும்; உரியன - ஏற்றுக் கோடற்குரியனவே; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ - இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் அன்றோ;’ என்றான்-. கையுறைப் பொருள்கள் யாதாயினும் கிடைத்தற்கரியதாக, கொணர்வார் தம் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் அன்பின் முதிர்வால் பக்தி புலப்பட அளிக்கப் பெறுமானால் அவை அமுதினும்மேலானவை. தூய்மையும் தூய்மையின்மையும் அன்பினைப் பொறுத்ததே ஆகும். அன்பினால் குகன் கொடுத்த பொருள்கள் தவத்தோர்க்காகாத தேனும் மீனும் ஆயினும் அன்பு கலத்தலால்தூய்மையுடையதாய் ஏற்றுக்கொளற்பாலவே யாகும் - என்றான் இராமன். முனிவர்களையும் நிறைவு செய்துகுகனையும் முழுமையான மனநிறைவுக்கு உரியவனாக ஆகும் வகையில் இராமனது உரை அமைந்தது அறிந்துஇன்புறுதறகுரியது. வாயால் உண்பதைவிட மனத்தால் ஏற்றுக்கோடல் அன்புடையாரிடத்துஉயர்ந்துவிடுகிறது. 15 |