இராமன் குகனை நோக்கி ‘நாளை விடியலில்நாவாய் கொண்டு வருக’ எனல் 1968. | சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், ‘யாம் இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப் பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில் தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்’ என்றான். |
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் - ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் கூறுவான்; ‘யாம் இங்கு உறைந்து நாளை எறி நீர்க் கங்கை ஏறுதும் - நாங்கள்இத்தவச்சாலையில் தங்கியிருந்து நாளைக்கு அவைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம் (ஆதலின்); நீ-; யாணர்ப் பொங்கும் நின் கற்றத்தோடும் போய்-புதுமை நிரம்பிய உன் உறவினர்களோடும் சென்று; உன் ஊரில் உவந்து இனிது தங்கி -உன்னடைய நகரத்திலே மன மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து; விடியல் - நாளைவிடியலில்; நாவாயோடும் சாருதி - மரக்கலங்களோடும் வருவாயாக;’ என்றான்-. குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய் வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு. 16 |