1983. | ‘ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை செய்குநர், சிலை வேடர் - தேவரின் வலியாரால்; உய்கதம் அடியேம் - எம் குடிலிடை, ஒரு நாள், நீ வைகுதிஎனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது’ என்றான். |
‘ஆணைசெய்குநர்- நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவராகிய; தேவரின்வலியார்- தேவர்களைக் காட்டிலும்வலிமை படைத்தவர்களாகிய; சிலைவேடர் -வில் ஏந்திய வேடர்கள்; ஐஇருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் - ஐந்து இலக்கம் பேர்இருக்கின்றார்கள்;நீஎம் குடிலிடை ஒருநாள் வைகுதி எனின் - இராமா! நீ எம் குடிசையிடத்துஒருநாள் தங்குவாயானால்; மேல் ஓர் வாழ்வு பிறிது இலை- எங்களுக்கு அதைக்காட்டிலும்மேலான வேறொரு வாழ்க்கை இல்லை; உய்குதும்- நாங்கள் ஈடேறிவிடுவோம்; என்றான்-. ஐ இருபது - நூறு. அதனோடு ஐந்தைப் பெருக்க ஐந்நூறு ஆயிரவர் என்று முடியும் ‘நீஎம்......வைகுதி எனின்’ - இரண்டிடத்தும் கூட்டப்பட்டது. ‘ஆல்’ அசை. 31 |