199.‘பேர் இசை பெற்றனை;
     பெறாதது என், இனி?
சீரியது எண்ணினை;
     செப்புகின்றது என்?
ஆரிய! நம் குடிக்கு
     அதிப! நீயும் ஓர்
சூரியன் ஆம்’ எனச்
     சோழர் சொல்லினார்.

     ஆரிய - தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர்
சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார்.                 76-8