1996. | ‘படர் உற உளன், உம்பி கான் உறை பகல் எல்லாம்; இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ; சுடர் உ று வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்; வடி திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். |
‘சுடர் உறு வடிவேலாய்! - ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற வேலை உடைய குகனே; உம்பி கான் உறை பகல் எல்லாம் - உன் தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான்வசிக்கும் நாள்கள் எல்லாம்; படர் உற உளன் - (எனக்கு வருத்தம் நேராமல்) தான்அந்த வருத்தத்தைத் தாங்க என்னுடனே இருக்கின்றான்; நீ போய் யான் என உரியாய் -நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் ஆட்சி உரிமையில் இருந்து ஆட்சி புரிவாயாக; யான் வடதிசை வரும் அந்நாள் - நான் மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும்அக்காலத்தில்; நின்னுழை வருகின்றேன் - உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்; சொல் முறை கடவென் - சொல்லிய பேச்சிலிருந்து மாற மாட்டேன்.’ ‘யான் என உரியாய்’ நானிருக்குமிடத்தில் நீ இருக்க வேண்டும் என்பதற்காக நானே நீ,நீயே நான் என்றான் குகனிடம் இராமன். ‘பகல்’ என்றதாயினும் ஆண்டு என்பதாகக் கொள்க.‘எண்ணிய சில நாளில்’ (1984) என்பது போல. 44 |