2005.‘பூ அலர் குரவோடும்
     புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல்,
     துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின்’ மணம் நாற,
     துணை பிரி பெடை, தான் அச்
சேவலொடு உற ஊடித்
     திரிவதன் இயல் காணாய்!

     பூ அலர் குரவோடும் - பூக்கல் மலர்ந்த குரா மரத்தினோடும்; புடை
தவழ் -
பக்கங்களில் பரவி வளர்கின்ற;  பிடவு ஈனும் - பிடவ மரங்கள்
உண்டாக்கிய; மாஅலர் சொரி சூழல் - பெரிய மலர்கள் விழுந்து
கிடக்கின்ற சுற்றுப் புறங்களில்;  துயில் எழும் - தூங்கி எழுந்த;  மயில்
ஒன்றின் -
ஓர் ஆண் மயிலின்;  தூவி -தோகை யானது;  இன் மணம்
நாற
- இனிய மணம் வீச; துணை பிரி பெடை தான் -சேவலைப் பிரிந்த
பெண்மயிலானது; அச்சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் - அந்த
ஆண்மயிலோடு  (வேறு பெண் மயில் உறவு கொண்டதாகக் கருதி) மிகவும் 
ஊடல்கொண்டு மனம்மாறுபடும் தன்மையை;  காணாய்-.

     குரா, பிடவ மலர்கள் விழுந்த இடத்தில் உறங்கி எழுந்த ஆண்மயிலின்
உடல் மணத்தைவேறாகக் கருதிப் பெண்மயில் ஊடியது.                7