2009. | ‘அகில் புனை குழல் மாதே! அணி இழை எனல் ஆகும் நகு மலர் நிறை மாலைக் கொம்புகள், நதிதோறும் துகில் புரை திரை நீரில் தோய்வன, துறை ஆடும் முகில் இள முலையாரின் மூழ்குவ பல - காணாய்! |
அகில்புனை குழல் மாதே! - அகிற் புகையால் மணம் ஊட்டிப் புலர்த்தப்பெற்றகூந்தலையுடைய பெண்ணே!; அணி இழை எனல் ஆகும்- அலங்காரமாகியஅணிகலன் என்று சொல்லும்படி பொருந்திய; நகு மலர் - பூத்த மலர்கள்;நிறை-நிறைந்த; மாலை- மலர்த் தொகுதியை உடைய; கொம்புகள் பல -பூங்கொம்புகள்பல; துறை ஆடும் முகிழ் இள முலையாரின் - நீர்த்துறையில் நீராடுகின்றஅரும்பிய இளமுலை உடைய மகளிர் போல; நதிதோறும் - ஆற்றிடங்களில்எல்லாம்; துகில் புரை திரை நீரில் தோய்வன - (வெண்) பட்டாடையை ஒத்த அலைகளை உடைய நீரில்படிந்து மூழ்குவனவற்றை; காணாய் - பூத்த மலர்த் தொகுதியுடைய கொம்புகள் அணி அணிந்த மகளிர் போல உள்ளன. இவற்றைமாலைகள் என்றும் பொன் அணிகலன் என்றும் கூறல் கவிமரபு. “கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையின் கொன்றைகள் மேல், தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்”(திவ்ய. 594.) என்பது காண்க. 11 |