2014.‘ “அடி இணை பொறைகல்லா”
     என்றுகொல், அதர் எங்கும்,
இடை இடை மலர் சிந்தும்
     இன மரம்? - இவை காணாய்!
கொடியினொடு இள வாசக்
     கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை நாணித்
     துவள்வன - அவை காணாய்!

     குயிலே!- குறில் போன்ற குரல் உடையாளே!; இனமரம்-
கூட்டமானமரங்கள்;  ‘அடி இணை பொறைகல்லா’  என்று கொல்-
(உன்) கால்கள் காட்டு வழியில்நடத்தலைப் பொறுக்கமாட்டா என்று கருதிப்
போலும்; அதர் எங்கும் இடை இடை -வழியிடைகளில்எல்லாம்;
மலர்களைச் சிதறும்;  இவை காணாய் -;  கொடியினொடுஇள வாசக்
கொம்புகள்-
 கொடிகளோடு இளைய
மலர்மணம் வீசும் பூங்கொம்புகள்;
உன் துடி புரை இடை நாணி - உன்னுடையதுடிநடுவை ஒத்தஇடையைக்
கண்டு வெட்கம்  உற்று; துவள்வன - ஒசிந்து அசைவன; அவை
காணாய் -.

     சீதையின் பாதங்கள் கல்லுறுத்தலினால் தாங்கமாட்டா என்று மரங்கள்
வழியிடை மலர்சிந்துவதாகவும் - சீதையின் இடை கண்டு நாணிக் கொடிக்
கொம்பு துவள்வதாகவும் கூறியதுதற்குறிப்பேற்றம். இவையிரண்டும்
இயல்பாகக் காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளாம். கொடி,பூங்கொம்பு தனித்தனி
இடைக்கு  உவமையாம்.  துடி - உடுக்கை.                          16