2015. | ‘வாள் புரை விழியாய்! உன் மலர் அடி அணி மானத் தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு - இவை காணாய் -! கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை - காணாய்! தோள் புரை இள வேயின் தொகுதிகள் -அவை காணாய்! |
வாள் புரை விழியாய்! - வாளை ஒத்த கண்களை உடையவளே!; உம் மலர் அடி அணிமான - உன்னுடைய மர் போன்ற பாதங்களில் அணிந்துள்ள அணிகலனை ஒப்ப; தாள் புரைதளிர் வைகும் - உன் அடியை ஒத்த தளிரிலே தங்கியுள்ள; தகை ஞிமிறு - அழகுடைய வண்டுகளாகிய; இவை காணாய் - ; கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை - கொள்ளும்குற்றம் உடைய இருள் கொண்டதும்வாசனை பொருந்தியதுமான கூந்தலைப் போல உள்ள மழை மேகத்தை; காணாய்-; தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை - (உன்) தோளை ஒத்த இளமையானமூங்கிலின் தொகுதிகளாகிய அவற்றை; காணாய் -, அடிபோன்ற தளிரில் அமர்ந்துள்ள வண்டுகள், மலர் போன்ற அடியில் அணிந்த அணிகலன்போன்றனவாம். எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டு மறைக்கும் தன்மை உடையது. ஆதலின், ‘கோள்புரை இருள்’ என்றார். புரை - குற்றம். வாள் புரை விழி, மலர் அடி - உவமையணி. தாள் புரை தளிர், குழல் புரை மழை, தோள் புரை வேய் - எதிர்நிலை யுவமையணி. 17 |