முனிவன் விருந்தோம்புதுல் 2026. | புக்கு, உறைவிடம் நல்கி, பூசனை முறை பேணி, தக்கன கனி காயும் தந்து, உரைதரும் அன்பால் தொக்க நல்முறை கூறி, தூயவன் உயிர்போலம் மக்களின் அருள் உற்றான்; மைந்தரும் மகிழ்வு உற்றார். |
புக்கு - தவச்சாலையில் புகுந்து; உறைவிடம் நல்கி - அவர்கள் தங்குதற்குரிய இடத்தைத் தந்து உபசரித்து; தக்கன கனி காயும் தந்து - உண்ணத்தக்கனவாகிய காய் கனிகளையும் கொடுத்து; உரைதரும் அன்பால் -பாராட்டத்தகுந்த அன்போடு; தொக்க நல் முறை கூறி - கூடிய நல்ல உபசாரவார்த்தைகளைச் சொல்லி; தூயவன் - தயரதனது; உயிர் போலும் - உயிர்போலச் சிறந்த; மக்களின் - பிள்ளைகளினிடத்து; அருள் உற்றான் - அருளைச்செய்தான்; மைந்தரும் மகிழ்வு உற்றார் - முனிவனது உபசரிப்பில் இராமலக்குவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சீதை இராமனுள் அடங்கியவள் ஆதலின் மைந்தர் என்றார். தூயவன் பரத்துவாசனும்ஆம். 28 |