யமுனையில் மூவரும் நீராடி உணவு அருந்தல்  

2033.ஆறு கண்டனர்; அகம் மகிழ்ந்து
     இறைஞ்சினர்; அறிந்து,
நீறு தோய் மணி மேனியர்
     நெடும் புனல் படிந்தார்;
ஊறும் மென் கனி கிழங்கினோடு
     உண்டு, நீர் உண்டார்;
‘ஏறி ஏகுவது எங்ஙனம்?’
     என்றலும், இளையோன்,

     நீறுதோய் மணிமேனியர் - வழி நடந்ததால் புழுதி படிந்த அழகிய
உடம்பினைஉடையவர்; ஆறு கண்டனர் - யமுனையாற்றைக்
கண்டு; 
அகம் மகிழ்ந்து - மன மகிழ்ச்சி அடைந்து;இறைஞ்சினர் - வணங்கி;
அறிந்து - செய்ய வேண்டிய கடன் முறைகளைஉணர்ந்து; நெடும்புனல்
படிந்தார்-
மிக்க நீரிலே மூழ்கி எழுந்து;  கிழங்கினோடுஊறு
மென்களி உண்டு -
கிழங்குடனேசுவை மிகுதியுள்ள மெல்லிய
பழங்களையும் உண்டு; நீர் உண்டார் - தண்ணீர்பருகினர்; ‘ஏறி ஏகுவது
எங்ஙனம்’ என்றலும் -
‘யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு?’
என்று இராமன் கூறுதலும்; இளையோன் - இலக்குவன்

     யமுனை யாற்றில் நண்பகல் நீர்மூழ்கி வழிபாடு செய்து உணவு
கொண்டு நீர் உண்டவர்யாற்றைக் கடந்து  அக்கரை செல்வது  எவ்வாறு
என்று சிந்தித்த அளவில் இலக்குவன் பின்வருமாறுசெய்தான் என அடுத்த
பாட்டில் முடியும்.                                             35