207.நல்கி, நாயகன்
     நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
     வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
     கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
     யாவும் தொடங்கினாள்.

     புரை - குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க. நோன்பு - விரதம்.                       9-2