208.கடி கமழ் தாரினான்,
     கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
     முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
     கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
     மொழிமின்’ என்றனன்.

     கணித மாக்கள் - சோதிடர்; வடி மழுவாளவன் - பரசு ராமன். 9-3