2091. | வேறு இடம், இயற்றினன் மிதிலை நாடிக்கும், கூறின நெறி முறை குயிற்றி, குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி, திண் சுவர் ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே. |
மிதிலைநாடிக்கும் - சீதைக்கும்; வேறும் இடம் இயற்றினன்- தனி இடத்தைச் செய்து அமைத்தான் (எவ்வாறு எனில்); கூறினநெறி முறை குயிற்றி - மேலே சொன்ன முறைப்படி செய்து அதன்மேல்; குங்குமச் சேறு கொண்டு அழகுறத் திருத்தி - குங்குமக் குழம்பைக் கொண்டு அழகாகச் சுவர்களை ஒழுங்கு செய்து; திண்சுவர்- வலிய சுவரிலே; ஆறு இடு மணியொடு தரளம அப்பி -ஆற்றிலிருந்து கிடைத்த மணிக்கற்களோடு முத்துகளையும் பொருத்தி. பிராட்டியின்தனி இடத்தைக் குங்குமக் குழம்பால் பூசி, மணியும் முத்தும் சுவர்களிலே அப்பி அழகு செய்தமை கூறினார், ஏகாரம் ஈற்றசை. 46 |