சாலை அமைத்த இலக்குவனை நினைந்து இராமன் நெகிழ்ந்து கூறுதல் 2095. | மேவு கானம், மதிலையர்கோன் மகள் பூவின் மெல்லிய பாதமும் போந்தன; தா இல் எம்பி கை சாலை சமைத்தன- யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே? |
மிதிலையர் கோன் மகள் - மிதிலா நகரத்து அரசனாகிய சனகன் மகளாகியசீதையின்; பூவின் மெல்லிய பாதமும் - பூவைக் காட்டிலும் மிக மெல்லியவாகியபாதங்களும்; மேவு கானம் போந்தன - கொடிய காட்டில் நடந்து வந்தன; தா இல்எம்பி கை - குற்றம் அற்ற என் தம்பியின் கைகள்; சாலை சமைத்தன - குடிலைஅமைத்துத் தந்தன; யாதும் இல்லார்க்கு - எந்தத் துணையும் இல்லாதவர்களுக்கு; இயையாத - வந்து சேராதன; யாவை - எவை (ஒன்றும் இல்லை.) ‘பாதமும்’ என்ற உம்மை சிறப்பும்மை; மென்மைத் தன்மையை நோக்கியது. பொதுப்பொருள்குறித்த இறுதி அடியமடால் இது வேற்றுப்பொருள் வைப்பணியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 50 |