4. நகர் நீங்கு படலம் 210. | விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து, எழுந்து, ‘என் நாயகனே! துயர் ஏது எனாத் தெளிந்திலேன்; இது செப்புதி நீ’ எனா, அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். |
வெய்து உயிர்த்து - வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்; அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள். 29-1 |