2123.எள் குலா மலர் ஏசிய நாசியர்,
புள் குலா வயல் பூசல் கடைசியர்,
கட்கிலார் களை; காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின், உயங்கினார்.

     எளகுலா மலர் - என் அழகு விளங்கும்  மலரை;  ஏசிய- (தன்
அழகால்) பழித்த; நாசியர் - மூக்கை உடையவராகிய; புள்குலா வயல் -
பறவைகள்மகிழ்ந்து  திரிகின்ற வயலிலே;  பூசல் - தொழில் செய்கின்ற;
கடைசியர் -உழத்தியர்; காதல்கொழுநரோடு - தம்மால் அன்பு
செய்யப்பெற்ற கணவரோஈடு;  உள்கலாம் உடையாரின்-
உள்ளே
பிணக்கு உடையாரைப்போல்;  களைகட்கிலார்- களை
பறிக்காதவர்களாய்;  உயங்கினார் - வாடிக்கிடந்தார்.

     கணவரோடு ஊடிய மகளிர் தொழில் செய்ய விருப்பமின்றி இருத்தல்
போலக் களைபறியாமல்இருந்தனர் கடைசியர்.  எள்மலர் - மூக்கிற்கு
உவமை. பூசல் - ஒலி - ஈண்டு ஒலிக்கு இடனாகியதொழிலைக் குறித்தது;
இலக்கணை  என்பர்.                                           22