213. | ‘ “சேல் ஆகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்- மேல் ஆகிய நான்முகனால், வேதங்களின் மா முறையின்- பால் ஆகிய யோனிகளின் பல ஆம் வருணம் தருவான், நால் ஆகியது ஆம் வருணம்தனின், முன் எமை நல்கினனால். |
சேல் ஆகிய மா முதல்வன் - மீனாக அவதாரம் செய்த திருமால்; முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில். 76-1 |