பரதனைக் கைகேயி அழைத்தல் 2142. | ஆய காலையில், ஐயனை நாடித் தன் தூய கையின் தொழல் உறுவான்தனை, ‘கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு’ என, வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள். |
ஆய காலையில் - அந்தச் சமயத்தில்; ஐயனை நாடி - தந்தையைத் தேடி; தன் தூய கையின் - தன் தூய்மையான கைகளால்; தொழல் உறுவான்தனை - தொழுதற்குவிரைந்துகொண்டிருக்கும் பரதனை நோக்கி; வேய்கொள் தோளி ஒருத்தி - மூங்கில் அனையதோள் உடைய (கைகேயியின்) ஏவல் மகள் ஒருத்தி; ‘அன்னை கூயன் - ‘உங்கள் தாய் கைகேயி கூப்பிட்டாள்; ஈண்டுக் குறுகுதிர்’ - இங்கு வருக; என விளம்பினாள் -என்று கூறினாள். இராமபிரானைத் தொழுங் கையாதலின் தூய கை என்றார் எனலாம். குறுகுதிர் -உயர்வொருமை. 41 |