2155.‘இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை,
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின்,
அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய,
வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ?

     (ஐயா!) இயம்கெழு தானையர் - வாத்தியங்கள் நெருக்கி இருக்கின்ற
சேனையைஉடையவர்; இறுத்த - (உனக்குத் தோற்று)கப்பமாகக் கட்டிய;
மா திறை
-பெரிய திறைப் பொருளை; உயங்கல்இல் - அ வருந்துதல்
இல்லாத; மறையவர்க்கு -வேதம் வல்ல அந்தணார்க்கு;உதவி- கொடுத்து;
உம்பரின் - விண்ணுலகில் உள்ள
தேவர்கள்நலத்தின் (பொருட்டாகச்
செய்யப் பெறும்); அயம் கெழு வேள்வியோடு-குதிரையைக் கொண்டு
செயப்பெறும் அசுவமேத யாகத்துடனே;  அமரர்க்கு ஆக்கிய
- தேவர்களுக்காக விதித்த; வயங்கு எரி -விளங்குகின்ற (காருகபத்தியம்
முதலிய) யாகஅக்கினி காரியங்களையும்; வளர்க்கலை - (முன்பு இடையறாது
செய்து வந்தாய்; இப்போதுஅவற்றைச்) செய்யாமல்; வைகவல்லையோ -
சோம்பித் தங்கியிருக்க மாட்டுவையோ.

     மறையவர்க்கு உதவலும், யாகங்கள் செய்தலும், பூசுரரையும், சுரரையும்
காத்தற் பொருட்டு, இரண்டனையும் இடையறாது செய்த தயரதன்
விண்ணுலகில் எதுவும் செய்யாமல் எவ்வாறு இருக்க இயலும்என்று
எண்ணிப் புலம்பினான் என்க. அயம் - அஜம் என்னும் வடசொல். குதிரை.
‘வாம்பரிவேள்வி’ (271)  என்று  முன்னும் கூறியது காண்க.           54