| 2175. | ‘  “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,  வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு  பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,  மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ? |  
     ‘சுழிஉடை- வஞ்சனை உள்ள; தாயுடை- தாயாகிய கைகேயினுடைய;  கொடிய சூழ்ச்சியால் -தீய புணர்ப்பினால்;  வழியுடைத்தாய் வரும்  மரபை மாய்த்து - தொன்றுதொட்டு வரும்சூரிய குலப்பரம்பரை வழக்கை  மாறுபடுத்தி;  பரதன் -; ஒரு பழி உடைத்து - ஒருபழியை உடையதாக;  பண்டு - முன்பு; ஆக்கினன்’ - செய்திட்டான்; எனும்மொழி - என்கின்ற  பேச்சை; உடைத்து ஆக்கலின் - (பிற்காலத்தில்)பேசும்படியாகச்  செய்திடுவதைக் காட்டிலும்; வேறு முறைமை - வேறு ஒழுங்கு (ஏதேனும்);  உண்டோ - (நீ செய்த செயலில்) இருக்கிறதா?’      ‘மூத்தவற்கு உரித்து அரசு’ என்பது சூரிய குல மரபு. மூத்தவன்  இருக்க, இளையவனாய பரதன்அரசுபுரிய வரம் வாங்கிய காரணத்தால்  அம்மரபைச் சிதைத்தாள் கைகேயி என்றான் பரதன்.  “மயின்முறைக் குலத்  துரிமையை மனுமுதல் மரபைச் செயிர்  உற” (1470) என்பதனைம இங்குக்  கருதுக. நின்னால் மரபு மாய்ந்தது என்றானாம். ‘ஓ’வினாப்பொருட்டு.    74  |