219. | ‘வானமே அனையது ஓர் கருணை மாண்பு அலால் ஊனம் வேறு இலானுடன், உலகம், யாவையும், கானமே புகும்எனின், காதல் மைந்தனும் தானுமே ஆளும்கொல் தரை?’ என்றார் சிலர். |
ஊனம் வேறு இலான் - இராமன். இராமனுடன் அனைவரும் காடு சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது மக்கள் கூற்று,. 191-1 |