கோசலை சொல்லால் மனப்புண் உற்ற  
பரதன் சூள் உரைக்கத் தொடங்குதல்  

2198.தாள் உறு குரிசில், அத் தாய் சொல் கேட்டலும்,
கோள் உறு மடங்களில் குமுறி விம்முவான்,
நாள் உறு நல் அறம் நடுங்க, நாவினால்
`சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்;

     தாள் உறு குரிசில்- சோசலையின் திருவடிகளில் வீழ்ந்த பரதன்; அத்
தாய் சொல்கேட்டலும் - அந்தத் தாயின் (கைகேயி செய்த வஞ்சனை
அறியாயோ என்ற) சொல்லைக் கேட்டஅளவில்; கோள்
உறுமடங்கலின்-
சிறைபிடிக்கப்பட்ட சிங்கம் போல; குமுறி விம்முவான்-மனக்குமுறல்
அடைந்துஅழுவான்;  நாள்உறு நல் அறம் நடுங்க- காலக்
கடவுளொடும் பொருந்தி அவர் அவர்க்குப்பயன் செய்யும் நல்ல
அறக்கடவுளும் நடுங்கும்படியாக; நாவினால் -தனது  வாயால்; சூளுறு
கட்டுரை
- சபதமாக ஏற்றுக்கொள்ளப்படும் உறுதி மொழிகளை; சொல்லல்
மேயினான்
- சொல்லத்  தொடங்கினான்.

     பரதனின் மனவேதனையைத் தட்டி எழுப்பியது கோசலை கேட்ட
வார்த்தை. அதனால், புண்பட்டமனம் குமுறிப் பொங்கியது; சபதம் சொல்லத்
தொடங்கினான். அது கேட்டு அறமே நடுங்குகிறதுஎன்றார். ‘நாவினால்’
என்றது சத்திய வாக்கினன் என்ற அவன் சொல் தூய்மையைச் சிறப்பித்து
நின்றது. இதனை வடிமொழியில் ‘தாற்பரியம்’ என்ப. ‘ஒழுக்கம் உடையவர்க்கு
ஒல்லாவே தீய,வழுக்கியும்  வாயாற் சொலல்” என்னும்  குறளில் (139)
‘வாயால்’ என்பது போல் வந்தது.‘அன்பிலதனை அறம்” (குறள் 77) காய்தல்
வழக்கு, தண்டம் செயும் ஆற்றல்  உடைய அறமும்நல்லோந் செய்யும்
சூளுரைக்கு நடுங்குகிறது என்றார். அறக்கடவுளின் தண்டம் காலத்தோடு
பட்டுநிகழும் ஆதலின் ‘நாள் உறு நல்லறம்’ எனப்பெற்றது. நாள் என்றது
காலத்தைக் குறிக்கும்ஆகுபெயர்.                                97