2201. | “தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன்” என்று அழைத்தவன், அறநெறி அந்தணாளரில் பிழைத்தவன், பிழைப்பு இலா மறையைப் பேணலாது, ”இழைத்த வன் பொய்” எனும் இழுதை நெஞ்சினோன். |
“தழைத்த-செழித்துள்ள; தண் துளவினோன்- குளிர்ச்சிபொருந்திய திருத்துழாய் மாலையைச்சூடியுள்ள திருமால்; தலைவன் அல்லன்”- பரம்பொருள் அல்லன்; என்று அழைத்தவன் -என்று சொல்லியவன்; அறநெறி - தரும வழியில் நடக்கின்ற; அந்தணாளரில்பிழைத்தவன்- அந்தணாளர் திறத்தில் பிழைசெய்தவன்; பிழைப்பு இலாஇறையைப் பேணலாது- ஒரு சிறிதும் குற்றம் இல்லாத இறைவன் அருளிய வேதத்தை நன்கு வழிபட்டுப் பாதுகாவாது; “இழைத்தவன்பொய்” -ஒருவர் செய்துவைத்த பொய்யுரை; எனும் இழுதை நெஞ்சினோன் -என்று சொல்லும்பேய்மனம் படைத்தவன்.... ‘திருமாலே பரம்பொருள்’ என்னும் கருத்தை நிலைநிறுத்தப் பரதன் சபதத்தில் அதனையும்ஒன்றாக்கினார் போலும். வேதம் ஒருவனால் உண்டாக்கப்பட்டதன்று; ‘அபௌருஷேயம்’ என்பர்வடநூலார்; இறைவே அருளியது. அதைப் பொய் என்பவன் பேய் என்றார். “உலகத்தார் உண்டென்பதில்லென்பான் வையத்தலகையா வைக்கப்படும்” (குறள் 850) என்பதும் இக்கருத்தினதாதல் அறிக. 100 |