தயரதன் உடலை விமானத்தில் வைத்து, யானைமேல் கொண்டு செல்லுதல் 2226. | பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார், சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்; கொள்ள மண்கணை குமுற, மன்னனை, மற்று ஓர் பொன்னின் மா மானம் எற்றினார். |
நான் மறைத்துறை செய் கேள்வியார்-நான்கு வேதங்களின் துறைகளிலும் பரந்து சென்ற கேள்வியறிவினை உடையவராய அந்தணர்; பரிவின்-(மனத்தின்கண் நிகழும்) அன்பிரக்கத்தோடு; மன்னனை-தயரத மன்னனது உடலை; அவ்வயின் - அஃதுள்ள இடத்தினின்றும்; சுற்றும் பற்றிவாங்கினார் - நாற்பக்கமும் இருந்து தம் கையாற் பற்றி எடுத்து; கொற்ற மண்கணை குமுற- வெற்றி தரும் வீரமுரசம்பேரொலி செய்ய; மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினார்-வேறொரு பொன்னாலியன்ற பெரிய விமானத்தில் எற்றினர். வேதம் எழுதாக் கிளவியாதலின் கற்றார் என்னாது கேள்வியார் என்றார். உடலை எடுத்தல், ஏற்றுதல் ஆகிய அனைத்திற்கும் மந்திரமும், தந்திரமும் உண்டாதலின் விமானம் ஏற்றுதலைஅந்தணர் மேற்றாக்கினார். 125 |