2227.கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து,
உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற,
அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ,
புரசை யானையில் கொண்டு போயினார்.

    நகரி- நகரத்திள் உள்ளார்; கரை செய் வேலை போல் - தனக்குரிய
கரையைத் தானே செய்துகொள்ளும் கடலைப் போல்; கையெடுத்து உரை
செய் பூசலிட்டு
- மிகவும் கூக்குரலெடுத்துஆரவாரித்து; உயிர் - தம்முயிர்
நிலைகுலையவும்; அரச வேலை - அரசர்களாகிய கடல்; சூழ்ந்து -
சுற்றிவந்து; அழுது கைதொழ- புலம்பி வணங்கவும்; புரசை யானையின்-
மணிகட்டப்பட்ட கயிற்றினைப் பிடரியின் கண் உடைய யானை மேல்;
கொண்டு போயினார்- கொண்டு சென்றார்கள்.

     விமானத்தை யானைமேற் கொண்டு சென்றார் என்க. கொண்டு
சென்றார் ‘கேள்வியர்’ எனமேற்வாட்டின்கண் உள்ள எழுவாய் வருவித்து
முடிக்க.                                                     126