2251. ‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்.

     ‘தேவர்தம்உலகினும் - தேவலோகத்திலும்; தீமை செய்துஉழல்-
பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற;  மா வலி அவுணர்கள்
வைகும்
நாட்டினும்
-பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள நாடுகளிலும்; ஏஎவை உலகம் என்று இசைக்கும்அன்னவை - எவை
எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய்
தலைவரை இன்மை
- தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல்
இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’

     நல்லோராயினும், அல்லோராயினும் நாட்டிற்கு ஆள்வோர்
இன்றியமையாதவர் என்பது இதனாற்கூறியதாம். உலகம் என்றாலே அரசன்
வேண்டும் என்றார்.                                              8