வசிட்டன் சொற் கேட்ட பரதன் அவல நிலை அடைதல்  

2255.‘தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச்
செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான்.

     ‘இவ் உலகம் - இந்த உலகம்; தஞ்சம் - (உனக்கு) அடைக்கலம்; நீ
தாங்குவாய்
- நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என - என்று;
முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே -
செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக்
கண்ணினான்
- அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை
நுகர்’ என
- விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல;  (அதுகேட்டு)
நடுங்குவாரினும் - நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த-
பயந்து சோர்ந்தான்.

     ‘மகனே!  உனை, மாநிலம் தஞ்சமாக நீ தாங்கு’ என்ற வாசகம் (1614.)
என்ற கோசலை கூற்றுஇங்கு முதலடியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
அயோத்திக்கு வந்தது  முதல் அமுத வண்ணமாக இருக்கின்றபரதனுக்கு
‘அருவிக் கண்ணினான்’ என்பது  ஒரு பெயராகக் கொள்க.             12