2259. | ‘வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில் பூர்தவன் முதலினர் புவியுள் தோன்றினார், மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம் காத்தவர் உளர்எனின், காட்டிக் காண்டிரால். |
‘வேத்தவைஇருந்த நீர்-அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்; விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் -திருமாலின்திருவுந்தித் தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர்- மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர் இருக்கவே -உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம் முறைமையால் காத்தவர் - உலகத்தைமுறைப்படி (அரசு நடத்திக்) காத்தவர்கள்; உளர் எனின் - இருப்பார்கள்ஆயின்; காட்டி- அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர்- உம் கருத்தையும் ஒப்புக் காண்பீர்களாக. காட்டிக் காண்டல் என்பது சான்றுரைத்து உறுதிசெய்தலாகும். ‘ஆல்’ அசை. 16 |