2263.‘ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்!’ என்று வாழ்த்தினார்.

   ‘ஆழியை உருட்டியும்-(அரசேற்று நடத்தி) ஆனைச்சக்கரத்தைச்
செலுத்தியும்; அறங்கள் போற்றியும் -பல்வகையானஅறச்செயல்களைப்
பாதுகாத்தும்;  வேள்வியை இயற்றியும் -(அரசர்க்குரியபரி
மேதம்,
இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க வேண்டுமோ?-
(நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை; நின்புகழ்- (இத்தகைய
நற்குண நற்செயல்களால்இப்போது  பெற்றுள்ள) நின்புகழே; ஏழினோடு
ஏழ்எனும் உலகம் எஞ்சினும்
- பதினான்கு உலகமும் அழிந்திட்டாலும்;
வாழிய - வாழ்வதாக;’ என்றுவாழ்த்தினார்-.

     வாழ்த்தினார் ‘அரசவையோர்’ என (2261.) முன்னைய பாடலின் இறுதிச்
சொற் கொண்டுமுடிக்க. செயற்கையால் பிறர்புகழ் தேடவேண்டும்; ஆனால்,
பரதனுக்கு இயற்கையாகிய குணம்செயல்களே பெரும்புகழுக்குக்காரணமாயின
என்று  பாராட்டுதல் அரசவையோர் கருத்தாகக் கொள்க.             20