227. | மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா உறக்க மா மாதும், அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி, ‘துறக்கமாம், என்னல் ஆய தூய மதில் அயோத்தி எய்தி இறுக்கும்நாள், எந்தை பாதம் எய்துவல்’ என்னப் போனாள். |
உபய பங்கயம் - இரண்டாகிய தாமரை - இங்கே திருவடிக்கு உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம். 22-2 |